ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் !


தலைமறைவாகவிருந்து இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (Bribery Commission) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சேனாரத்னவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது


கிரிந்தவில் உள்ள கடற்துறை துறைமுகத்தில் மண் அகழ்வு தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து (இது ஒரு கொரிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது) ராஜித சேனாரத்ன விளக்கமளிக்க பல முறை அழைக்கப்பட்டும், அவர் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.


ராஜித தலைமறைவாக இருந்தநேரம் அவரது தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வீடு காலியாக உள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது. அதன் மூலம் அவர் வேண்டுமென்றே கைது செய்வதைத் தவிர்த்து வந்ததாக கருதப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.