பெண்கள் பாதுகாப்பு இல்ல தொழிற்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!📸
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டி ஆவணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2025 ஆகஸ்ட் 28ஆம் திகதி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் வழிக்காட்டுதலின் கீழ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) மற்றும் ofERR Ceylon அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்றது.
விழிப்புணர்வு அமர்வில்,
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களின் அடிப்படை நெறிமுறைகள்,
தேசிய வழிகாட்டுதல்களின் நோக்கங்கள்,
தங்குமிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்,
பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்கள்,
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் விசேட உளவியல் ஆலோசனைகள் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் திருமதி A. வினோதா, வடமாகாண சிறுவர் நன்னடத்தை சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீபா சதாசிவம், யாழ்ப்பாண சட்டத்தரணி திருமதி யசோதா சுகந்தன், ofERR Ceylon திட்ட இணைப்பாளர் திருமதி இ. கிருஷானந்தி, நிகழ்ச்சித்திட்ட வளவாளர் திருமதி இந்திராணி ராஜேந்திரன், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி. தயாபரி, JSAC நிறுவன உத்தியோகத்தர்கள், பொலிஸ் சிறுவர்-பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் மனவலிமையும் வழங்கும் சமூக சூழலை உருவாக்குவதற்கு முக்கிய பங்களிப்பாக அமைகின்றன.














.jpeg
)





கருத்துகள் இல்லை