மட்டு ஆரையம்பதி கோயில்குளத்தை சேர்ந்தவர் மண்முனை பாத்திற்கு அருகில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!📸


காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப ஆரையம்பதி கோயில்குளத்தைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மண்முனை பாலத்தை அண்டிய ஆற்றுப்பகுதியில் இறங்கி வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


மீன்களை வீசிப் பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்


உயிரிழந்தவர் கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல் தம்பி தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் நீரிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு சம்மந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.