செங்கல்பட்டு ஸ்ரீ வரம் தரும் வராஹி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், PLOT NO : 97 & 98, வையாவூர் ஊராட்சி. நூதனமாக ஸ்ரீ பத்மாவதி நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும்
அருள்மிகு. ஸ்ரீ வரம் தரும் வராஹி அம்மன் ஆலய முதலாம் ஆண்டு விழா மற்றும் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நலம் தரும் நாகவல்லி அம்மன், ஸ்ரீ மகிழ்ச்சி தரும் மஹா காளி
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்.
🟢தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா....
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லை...
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே....
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே....
அன்புடையீர் வணக்கம்,
எல்லாம் வல்ல கருணையே வடிவான பராசக்தி நமது குமாரவாடி கிராமத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் துன்பத்தோடு வருபவர்களின் கஷ்டங்களை போக்கி இன்பத்தோடு அனுப்பி வைக்கும் கருணை தாயாக ஸ்ரீ வரம் தரும் வராஹி அம்மனாக அருள் பாலிக்கின்றாள். அப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் அம்பாளின் உத்திரவுபடி, புதிய ஸ்ரீ நலம் தரும் நாகவல்லி அம்மன் ஸ்ரீ மகிழ்ச்சி தரும் மஹா காளி அம்மன் ப்ரதிஷ்டை செய்து நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆடி மாதம் 24 -ம் தேதி (09.08.2025) சனிக்கிழமை பெளர்ணமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்ளாக சிம்ம லக்னத்தில் "அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்" சிறப்பாக நடைபெற உள்ளதால் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொண்டு மூன்று மஹா சக்திகளின் பரிபூரன திருவருளை பெற்று அம்பாளின் அருளுக்கு பாத்திரர் ஆகுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை