மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரிவிலக்கு (Duty-Free) பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் மீது ஜனாதிபதி அலுவலகம் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாதுகாப்புப் பணியாளர்கள் ஏழு பேரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாலைதீவுக்குப் புறப்பட்டபோது, இந்த அதிகாரிகள் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோதே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
விதிகளின்படி வரிவிலக்கு மதுபானம் வாங்க தகுதியற்றவர்கள் இருந்தபோதிலும், அவர்கள் அதை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க விதிமுறைகளின்படி, நாட்டிற்கு வரும் அல்லது நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு மட்டுமே வரிவிலக்கு பொருட்களை வாங்க அனுமதி உண்டு. அதிலும் குறிப்பிட்ட அளவு வரம்புகளுக்கு உட்பட்டே வாங்க முடியும்.
கருத்துகள் இல்லை