கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

 


களுத்துறை, கட்டுகுருந்த பகுதியிலுள்ள கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கடற்கரையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தந்தை மற்றும் மகளினால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு 119 அவசர எண்ணுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில் கடற்கரை மணலுக்குள் உயிரிழந்தவரின் தலை புதைந்திருந்தமை தெரிய வந்துள்ளது. 

உயிரிழந்த நபர் 55-60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 


உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், அவர் கறுப்பு நிற காற்சட்டை, பெல்ட் மற்றும் வெள்ளை சொக்ஸ் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.