வீடொன்றில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!.
பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை