அடங்காத குழந்தைகளை நல்வழிபடுத்துவது எப்படி?
உணவில் உப்பினை குறைத்தால் பிடிவாதம் மற்றும் காம எண்ணங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
ஒரு 18 வயது உள்ள கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பெண் குழந்தை. அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் அரசாங்க பணியில் உள்ளவர்கள்.
அந்த குழந்தைக்கு தன் வீட்டிற்கு கேபிள் டிவி பணம் வாங்க வரும் 48 வயது திருமணமான ஆண் மீது காதல்.
பெற்றோர் இருவருமே கடந்த மாதம் அந்த பெண்குழந்தையின் ஜாதகத்தை காட்டி ஆலோசனை பெற என்னை அனுகினார்கள்.
உங்கள் குழந்தைக்கு உப்பு மற்றும் புளிப்பு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளதா என கேட்டேன்.
இதெல்லாம் ஜாதகத்தில் தெரியுமா சார் என கேட்டுவிட்டு ஆமா சார் உப்பு, புளிப்பு அதிகமா சாப்பிடுவா சார் என்றார் தாய்.
சரி இன்றிலிருந்து புளிப்பினையும் உப்பையும் முடிந்த வரை குறைத்து கொடுங்க என்றேன்.
மேலும் குபேர முத்திரையை தினமும் 20 நிமிடம் செய்ய சொல்லுங்க என்றேன்.
இன்று காலை அந்த குழந்தையின் பெற்றோர் என்னை மறுபடியும் தொடர்பு கொண்டனர்.
குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் உள்ளதாகவும். தன் தவறுக்கு வருந்தி மண்ணிப்பு கேட்டதாகவும் கூறினார்.
சரி எப்படி அந்த மாற்றம் நடந்ததுனு பார்ப்போம்.
உப்பு மற்றும் புளிப்பு மனிதனுக்கு திமிர்ப்பினை தரும். வீன் பிடிவாதம் நான் என்கிற அகந்தை, பொருமையின்மை வயதுக்கு மீறிய காம எண்ணங்கள் இதையெல்லாம் தரும்.
இத குறைத்தால் மேற்கண்ட தீய எண்ணங்கள் தானாக குறையும்.
குபேர முத்திரைக்கு இதில் என்ன பங்கு?
சுன்டு விரல் மற்றும் மோதிர விரலை மடிச்சி உள்ளங்கைய தொடுவோம். மற்ற நடுவிரல் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் நுணிகள் ஒன்னோட ஒன்னு தொட்டமாறி இருக்கும்.
இதுல கீழ்நோக்கிய பூதங்களான மண் மற்றும் நீரை குறைத்து மேல் நோக்கிய பூதங்களான ஆகாயம் , காற்று , நெருப்பு மூனையும் அதிகப்படுத்தறோம்.
எனவே கீழான மற்றும் தேவையற்ற எண்ணங்கள் மறைந்து உயர்ந்த மேலான எண்ணங்கள் உருவாகும்.
இந்த பதிவு எதுக்காகன்னா இத படிக்கற யார் வீட்டிலாவது குழந்தைகள் மேற்கண்ட பிரச்சினைல சிக்கி இருந்தா இந்த பதிவில் உள்ள தகவலை பயன்படுத்திக்கோள்ளுங்கள்.
நன்றி
பிரகாஷ் சர்மனி

.jpeg
)





கருத்துகள் இல்லை