புட்டியில பால்குடிக்கிற குழந்தையும் நாளை குப்பியோடு!
பால்மணம் மறந்திருக்காது
பல்லுக்கூட முளைத்திருக்காது
கால்கை வலுத்திருக்காது
கண்கூட வெளிச்சிருக்காது
தோலும் தடித்திருக்காது
தொட்டிலில் படுத்திருக்காது
பத்துக்கிலோகூட இருந்திருக்காது
பெத்ததாயைக்கூட புரிஞ்சிருக்காது
விரல்கள் விருத்தியடைஞ்சிருக்காது
வீரியமும் இருந்திருக்காது
தலைமுடியும் வளர்ந்திருக்காது
இந்தத்
தலைமுறையும் வளரக்கூடாது என்றே
புட்டியில பால்குடிக்கிற குழந்தையும்
நாளை
குப்பியோடு வந்திடும் என்றுதானே
கொன்று புதைத்தீர்கள்..?
-பிறேமா(எழில்)-

.jpeg
)





கருத்துகள் இல்லை