கொழும்பு நீதிமன்றத்திற்கு வெளியே பதற்றம்!


 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் கொழும்பில் பதற்றம்! நீதிமன்றத்திற்கு வெளியே குவிந்த ஆதரவாளர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு நீதிமன்றத்திற்கு வெளியே பதற்றமான சூழல் நிலவியது.


ஐக்கிய தேசியக் கட்சியின் பெருமளவிலான ஆதரவாளர்கள் மற்றும் விக்கிரமசிங்கவின் விசுவாசிகள் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கூடி, அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.


இதற்கிடையில், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, சிறப்பு அதிரடிப் படை (STF) மற்றும் சிறப்பு பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.