ரணிலின் கைதும்... அதன் எதிர் வினைகளும்.!!
இலங்கையில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் சிறைக்கு செல்வதற்கு மற்றைய எவர்களையும் விட எல்லாத் தகுதிகளையும் உடையவர் ரணில் விக்ரம சிங்க.
இதற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். இது அவரின் பொதுவாழ்க்கையின் அரசியல் செயற்பாடுகளின் அடிப்படையில்.
தற்போதைய கைதிற்கான காரணங்களின் அடிப்படையில் நாம் இதனைக் கூறவில்லை.
இந்த விமானப் பயணத்திற்கான செலவு என்பதற்கு அப்பால் அளவிற்கு அதிகமான சொத்துகளை அவர் கொண்டு கழுத்துப்பட்டியும் கோட் சூட்டுடன் திரிபவர் அவர்.
என்ன....? மகிந்த ராஜபக்சா போன்றவர்களையும் விடவா என்றா...? அங்கலாய்புக்களை பலரும் முன் வைத்தாலும்…?
யுத்தத்தை முடிவடைய...? வைத்து அதன் பின்னர் அதிகம் சொத்துகளைச் சேர்த்தவர்கள் என்பது மகிந்த குடும்பதினர் முன்னிலையில் இருந்தாலும்....? இதற்கு முன்னரே பிறப்பால் தனது மாமனார் ஜே.ஆர். காலத்தில் இருந்து அவர் தொடர்ந்த அரசியல் வாழ்வும் அவருக்கான செல்வங்களைக் குவித்து இருக்கின்றது.
இந்த வருமானத்திற்கு மீறி சொத்துக் குவிப்பில் வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என்று எந்த அரசியல்வாதிகளும் விதிவிலக்காக இல்லை.
இதில் சிங்களம், தமிழ் என்ற வேறுபாடுகள் இருக்கவில்லை.
இவர்கள் யாபேருக்கும் இந்த கைது அவ்வளவு உவப்பாக இருக்கப் போவது இல்லை.
இதில் மிகச் சிலர் விதிவிலக்காகவும் இருந்திருக்கின்றனர்.... இன்னும் இருக்கின்றனர்....
தேசிய மக்கள் சக்தி அரசு அமைந்த பின்பு அரசியல் தலைவர்கள், கட்சிகள் தரப்பில் இருந்து வரும் அரசிற்கு எதிரான செயற்பாடுகள் பலவும் இதன் அடிப்படையிலானவை.
ஆனால் அதனை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. ஏதோ அரசியல் காரணங்கள் என்றாக மட்டும் பதில் உரைப்பார்கள்.
எனவே இந்த கைதை இந்த சகல தரப்பினரும் நிச்சயம் வெளிப்படையாக அல்லது மௌனமாக எதிர்பார்கள்.
எமக்கும் இது நடைபெறலாம் என்ற பயம்தான் இதற்கான முக்கிய காரணம்.
NPP ஆட்சிப் பொறுப்பை ஏற்க முன்னரும், பொறுப்பை ஏற்ப பின்னரும் இலங்கையில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கான தண்டனையை நீதித் துறை தன் வழியில் செயற்படும் இதில் எந்த தலையீடும் அரசியல் காய் நகர்த்தல்களையும் அரசு செய்ய மாட்டாது.
மாறாக அது சுயாதீனமாக இயங்கும் வகையில் இருக்கும் என்பதை இந்த அரசு நிரூபித்து வருகின்றது.
அது சதாரண பொலிஸ்காரர் கையூடு வாங்குவதில் இருந்து போதை பொருள் கடத்துபவர் என்றாக சிறையில் இருந்து முறைக் கேடாக கைதியின் வெளியேற்றத்தை செய்தவர் என்றாக கைது செய்தல் நீதி மன்றத்தில் நிறுத்தல் என்பது சிறிதோ பெரிதோ நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதில் அதிகம் தமிழ் பேசும் தரப்பாக சந்திரகாந்தனை தவிர அதிகம் யாரும் நீதி மன்றம் முன் இதுவரை நிறுத்தப்படாத படியால் இது தமிழருக்கு எதிரானது என்றாக அரசியலை தமிழ் தலைமைகள்...? இதுவரை செய்வில்லை.
இது ஏனைய முஸ்லீம், மலையக அரசியலவாதிகளுக்கும் பொருந்தும்.
ஆனால் நாமல் போன்ற எதிர் கட்சியினர் தமது தலைக்கு மேலாக தொங்கும் கத்தியில் இருந்து எவ்வாறு தம்மை தப்பித்துக் கொள்லாம் என்பதற்கான பேரினவாதத்தை கையில் எடுப்பார்கள்.
நிச்சயம் அளவில் குறைவாக இருந்தாலும் இதைத்தான் சஜித்தும் செய்வார்.
ஜே.ஆர். உயிருடன் இருந்திருந்தால் இந்த ரணில் விக்ரம சிங்காவிற்கான இடம் இல்லாமல் போய் அவரின் மாமனாராகிய ஜே.ஆருக்கே இந்த சிறையில் அடைப்பு மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
ரணிலை எல்லா வகையிலும் தனது வாரிசாக வளர்த்து விட்டது என்றாக இல்லாமல் அதனை செயல்படுத்துவதை நேரிலும் பார்த்துவிட்டுத்தான் ஜேஆரின் இயற்கை மரணம் நிகழ்ந்தது.
மேற்குலகுடனான உறவு என்பதாக இருக்கட்டும், பேரினவாதத்தின் உச்ச செயற்பாடுகளை செயற்படுத்தியவர் என்பதாக இருக்கட்டும் இவை இரண்டிலும் இவர்கள் இருவரும் ஒரு வண்டியிலான இரண்டு சக்கரங்கள்தான்.
ஒரு முக்கிய வித்தியாசம் ஜே.ஆர். இனவாதத்தை வெளிப்படையாக துப்பினார் ரணில் அதனை துப்பாது மென்று விழுங்குதாக நடித்துக் கொண்டு தனது மாமனார் போல் செயற்பட்டார்.
அது இலங்கையில் நடைபெற்ற பேரிவாதத்தினால் நடத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம் அரசில் செயற்பாடு என்பதாக புலிகளில் ஏற்பட்ட பிளவிற்கு பால் வார்த்த வரை பொருந்தும்.
இலங்கையின் இனப்பிரச்சனை என்றாக சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்மங்களை அதிகம் விதைத்தவர்கள் இருவருமே அதிகம்.
ஒருவர் ஆர்பாட்டமாக ரணில் அமைதியாக நண்பேன்டா என்பதாக
வேறு யாரும் இதனைச் செய்வில்லையா என்றால் இவர்கள்தான் இதில் முன்னிலையில் உள்ளனர் என்பதாகவே பதில் கூற முடியும்.
மாமனார் ‘….போர் என்றால் போர்… சமாதானம் என்றால் சமாதானம்….’ என்று ரூபவாகினி தொலைக் காட்சியில் தோன்றி சூழுரைத்ததில்.... முதல் வரிகளை வெளிப்படையாக ஜே.ஆர். தனதாக்கிக் கொள்ள ரணில் முதல் விடயத்தை நசூக்காக அமுக்கி வாசித்து இரண்டாவதை வெளியில் காட்டும் இருவகை நரிகள்தான் இவர்கள்.
ஒருவர் காட்டு நரி மற்றயவர் நாட்டு நரி
சந்திரிகா அம்மையாரின் சிறுபான்மை வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வுச் சமாதானப் பொதியை இல்லாமல் செய்தலில் இருந்து( இதில் சம பங்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் உண்டு), இந்தியாவிற்கும் தமிழ் மக்கள்... சிறப்பாக விடுதலை அமைப்புகள் இடையேயான முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்கியவர்கள் இருவரும்.
இடையில் இதற்கான உரிமத்தை பிரேமதாசாவும் தனதாக்கினார்.
அது பிரேமதாச, பிரபாகரன் தேன் நிலவு காலத்தில் நடைபெற்றது.
இதன் விளைவுகள் தான் அதிகாரம் குறைக்கப்பட்ட மகாணசபைகள், எப்போதும் இணைப்பில் இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பிற்கான அத்திவாரங்களும் ஆகும்.
இலங்கையின் யுத்தத்தின் போதான இஸ்ரேல் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப்படை(STF) செய்த கொலை அளவிற்கு இலங்கைப் பாதுகாப்பு படைகளில் ஏனைய பிரிவுகள் செய்ய முடியவில்லை.
இதன் தந்தையும் தனையுமாக இணைந்து செயற்பட்டவர்கள் ஜேஆரும் ரணிலும்தான்.
ரவி ஜெயவர்த்தனா இதன் பொறுப்பாளர்.
இவர்களின் இணைப்பில் உருவானதுதான் இன்று வரை அகற்ற முடியாமலும் STF அதிகாரம் தொடர்கின்றது.
மக்களை ஏமாற்றி நேரடி வெற்றி மூலம் பதவியிற்கு வந்தவராக ஜேஆர் அறியப்பட்டவர்.
எதிர் கட்சியின் குடியுரிமையைப் பறித்தல் என்பதான தந்திரோபாயங்களை கையாளாமல் பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாமலே பாரளுமன்றம் சென்று ஜனாதிபதியானவர் ரணில்
அப்போது நாட்டை விட்டு கோதபாய ஓடுவதற்கும் திரும்பி வருவதற்கும் எல்லா வகையிலும் அனுசரணையாக செயற்பட்டவர் ரணில்.
நாட்டின் தலைவர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ‘பேய்’ ‘பிசாசு’ என்றாக சொல்லப்படுவர்களுடன் சகலருடனும் சமரசம் செய்து இணைந்து செயற்பட்டவர்.
ஜே.ஆர். பண்டாரநாயக்கா வழி வந்தவர்களை இல்லாமல் செய்தது போல் அந்த வழியை சற்று விலத்தி வந்த சந்திரிகாவை இல்லாமல் செய்தாக இருக்கட்டும் இதன் பின்பு தனது உண்மை முகமாக ராஜபக்சாகளை முழுமையாக காப்பாற்றிவர் இவர்.
தென் இலங்கையை அதிகம் பிரதானப்படுத்திய ஜே.வி.பின் கிளர்ச்சியில் இவரின் கறைபடிந்த வதை முகாங்கள் அதிகம் உண்டு.
இதில் ‘படகந்தை’ என்பதற்கும் அப்பால் பல முகாங்கள் இருப்பது என்பது இவர் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் மட்டும் அல்ல இலங்கையின் சமான்ய சிங்கள் மக்களுக்கும் எதிரான கழுத்துப் பட்டி கோட் போடும் கொழும்பு வாழ் மேட்டுக்குடி வெஸ்ட் மினிஸ்ரி அரசியல்வாதியாக(Westminster politician) தன்னைக் காட்டிக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க.
வயது மூப்படைந்திருப்பதினால் மேற்கு இந்த கைதை அவரின் இளைமைக் காலத்து கைதாக அதிகம் அணுகி எதிர் வினையாற்றாவிட்டாலும்….?
ஏதோ ஒரு வகையில் எதிர் காலத்தில் (அது ஐ.எம்.எவ் என்றாகவும் கூட) இதற்கான எதிர் வினையை தமது விசுவாச சீடனுக்கு காட்டலாம்…?
பொறுத்திருந்து பார்ப்போம்

.jpeg
)





கருத்துகள் இல்லை