ரணிலின் கைதும், ஊடகச் சன்னதங்களின் ஆட்டமும் !


இலங்கை தேசத்தின் பொருளாதார மீட்புக்கான தேவன் என்று பெருமெடுப்போடு ரணிலைப் போற்றியவர்கள்   இன்றைக்கு அவர் திருடன் என்கின்றார்கள்.   


ஜனாதிபதியாக பணியாற்றும் போது அவர் வெளிநாடு சென்ற பயணங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும், பெருந்தொகை நிதியை  தவறாகப் பயன்படுத்தியதாகவுமான  குற்றச் சாட்டுகளில்   கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


1990 களிலிருந்து  ஆறு தடவை இலங்கையி்ன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இலங்கையின் அனைத்து தீமைகளையும் பூசி மெழுகிய பெரும் அப்புக்காத்து.  இவரது கரங்கள் இனவாத இரத்தத்தில் தோய்ந்த கொடூரக் கரங்கள். 


76 வயதான அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டு பயணங்களை சுமார் ரூ .600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் மேற்கொண்டிருந்ததாகச் சொல்லப் படுகிறது. மனைவியின் பட்டமளிப்பிற்கு கூட அரச நிதியில் சென்றதாக அநுர அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


இலங்கையில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரசிங்க, 1977 ஆம் ஆண்டில் எம்.பி.யாக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இலங்கைத்தீவின் அரசியல் சதுரங்க விளையாட்டின் சாணக்கியராக இருந்து வருகிறார்.


 ஜே ஆரின் மருமகனான இந்த ரணில் மாமனிற்கேற்ற மருமனாகவே இற்றைவரை  தன்  ஆட்சியில் நிலைத்திருந்தார். 

  

2020 தேர்தல்களில் அவரது கட்சி அழிக்கப்பட்ட கட்சி. தேர்தலின் ஊடாக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நியமன  நாடாளுமன்ற ஆசனத்தின் ஊடாக, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு மத்தியில் தனியொருவராக அமர்ந்து, தனது வெப்பிசார அரசியலை நடத்தியவர் .. அவரைப்  பின் பிரதமாராக்கியது காலம். . 


ஆனால் இந்தக்  கைது கண்துடைப்பா ? உண்மையானதா ? பட்டலந்தையின் எதிரொலியா ??என்று அறிய முடியாவிட்டாலும்,  அசைக்க முடியாச் சிங்கமெனச் சுழன்ற ரணில் இன்று  கைதாகிக் கூண்டில் நிற்பது சமானியத் தமிழனுக்கு  மகிழ்ச்சிதான் !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.