நேபாள நாடாளுமன்றமும் நீதிமன்றக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டது!
நேபாளத்தில் போராட்டம் தீவிரம்.. இந்திய எல்லையில் கடும் பாதுகாப்பு
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகத் தடை காரணமாக இந்தியா - நேபாள எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்ட ஊடகவியலாளர்!
வன்முறையாக மாறிய போராட்டம்
இந்த அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முன்னதாக, நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் உட்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கருத்துகள் இல்லை