விவசாயிகளுக்கு உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கல் நிகழ்வு!


வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தல்


கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியம் (PSDG) கீழ் விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (10.09.2025) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி வி. சோதிலட்சுமி தலைமையேற்றார்.

பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ சிறப்புரையாற்றினார்.


உள்ளூர் விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு உபகரணங்களும் உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.


கிளிநொச்சி மாவட்டத்திற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் இவ்வருடம் ரூபா 99.9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் விளக்கமளித்தார்.


இந்நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர் த. யோகேஸ்வரன், வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள கணக்காளர் பிரதீபன், விதை மற்றும் ஆராய்ச்சி பிரிவு அதிகாரிகள், பண்ணை உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மேலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.