தொழிற்சந்தை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சந்தை தொடர்பாக முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (10.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், தொழிற்சந்தையை முன்னிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஒழுங்கமைப்புகள், தொழிலற்றோருக்கு வழங்கப்பட வேண்டிய அறிவித்தல்கள், மேலும் அவர்களை தொழிற்சந்தைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்க அதிபர் அவர்களினால் உத்தியோகத்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மனிதளவள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு. க. கருணாகரன், மாவட்ட பிரதேச மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை