பிரபல பாதாள உலக முக்கிய புள்ளி “மிதிகம சூட்டி” கைது.!
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபாத் மதுஷங்கவை கைது செய்வதற்கான சிவப்பு அறிக்கையை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை