திலீபத்தை மீளுருவாக்கம் செய்து வரலாற்றின் வெளிச்சத்திற்கு கொண்டுவர உறுதியேடுப்போம்!

 


ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு போராடிக் கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கம் ஒரு கட்டத்தில் அதைக் கைவிட்டு, தமது ஆயுதங்களையும் கையளித்து விட்டு அகிம்சை வழியில் போராடியதற்கு எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கு உயிர்விலையும் கொடுக்கப்பட்டது.


அகிம்சையை உலகிற்குப் போதித்ததாகப் பறைசாற்றிக் கொள்ளும் ஒரு அரசுதான் இவ்வளவிற்கும் காரணம்.


இந்திய அரசு குறைந்தளவிலேனும் அகிம்சைக்கு மதிப்புக் கொடுத்திருந்தால் இந்த தீவில் அமைதியும் சமாதானமும் நிலைத்து நீடித்திருக்கும். அதன் பின்னான அனைத்து பேரழிவுகளும் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.


ஆனால் நடந்தது என்ன?


பின்னாளில் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து பயங்கரவாதிகள் என்று கூறி அழித்த ஒரு போராட்ட இயக்கத்தின் உண்மையான கதை இது.


இது திட்டமிட்டு வரலாற்றில் இன்றுவரை இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.


இது இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் இருட்டடிப்பு மட்டுமல்ல, இன்றைய அரச பயங்கரவாத ஒட்டுமொத்த உலக ஒழுங்கினதும் இருட்டடிப்பு.


இத்தகைய உலக ஒழுங்கை நிர்மூலம் செய்யாமல் தேசிய இனங்கள் விடுதலையின் ஒரு அடியைக்கூட நகர்த்த முடியாது என்பதை அன்றே திலீபன் தனது தியாகத்தினூடாக நிரூபித்துக் காட்டினான்.


பின்பு நடந்தது வரலாறு.


திலீபம் தான் பிரபாகரனியம் ஒரு உலகளாவிய கோட்பாடாக முகிழ முதன்மைக் காரணம்.


நாம் திலீபத்தை மீளுருவாக்கம் செய்து வரலாற்றின் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதனூடாகவே எமது போராட்டத்தின் நீதிக்கான பயணத்தை தொடர முடியும்.


எனவே திலீபனை - திலீபத்தைக் கொண்டாடுவோம்.


#திலீபம்.❤💛

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.