ஜெனிவாவில் நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!📸
புலம்பெயர்ந்த தேசத்தில்
ஜெனிவாவில் நலவாழ்வு நிறுவனம் நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் 100 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
காலை 10.37 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்ச்சி, மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழில் பேசி, தாய்மொழியிலே மருத்துவ ஆலோசனையைப் பெறுவதில் மக்கள் ஆர்வதுடன் ஈடுபட்டதை காண முடிந்தது.
இந்நிகழ்வில் சித்த ஆயூள்வேத வைத்தியம், பொதுமருத்துவம், நரம்பியல் மருத்துவம், மனநல மருத்துவம்,பல் மருத்துவம் மற்றும் சில பரிசோதனைகள் உள்ளிட்ட துறைகளில் தனித்தனியாகவும் குழுவாகவும் அவர்கள் விரும்பியபடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்கள்
எவ்வளவு முன்னேறிய நாட்டில் நாம் வாழ்ந்தாலும், மருந்தில்லா மருத்துவத்தை மக்கள் தேடுகின்றார்கள் என்பதை
இயற்கை மருத்துவத்தையும் சித்த மருத்துவத்தையும் நாடி நின்ற பயனாளர்கள் கோடிட்டு காட்டினார்கள்.
மேலும்,
ஜெனிவாவில் பணியாற்றி வரும் பல் மருத்துவர் Dr. டிலாணி பிரவு, நலவாழ்வு மருத்துவக் குழுமத்துடன் இணைந்து தனது மதிப்புமிக்க சேவையை இங்கே வழங்கினார்.
இவரின் இன்றைய அர்ப்பணிப்பிற்காக நலவாழ்வு (சுவிஸ் தமிழ் மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைப்பு) சார்பில் எங்கள் பேரன்பின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல், பேர்ன் மாநிலத்திலிருந்து கலந்து கொண்டு உதவிய மருத்துவதாதி செல்வி அஸ்வினிக்கும் நலவாழ்வு சார்பில் மனமார்ந்த நன்றிகள்
அத்துடன், இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜெனிவா வாழ் மக்களுக்கும், ஒழுங்குபடுத்தல் பணிகளில் உதவிய அனைத்து உறவுகளுக்கும் எங்கள் இதயபூர்வ நன்றிகள்.
கருத்துகள் இல்லை