தியாக தீபம் -மூன்றாம் நாள் (17.09.1987)!


கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?....


என்ன பகிடியா பண்ணுறீங்க?…… ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான்…… பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று கேட்டீங்க?”…..

 என்று ஆவேசத்துடன் என்மீது பாய்கிறார்.


இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்*ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… 


ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.