ஓய்வுபெறுகிறார் ஐநாவின் சமாதானப்படை வீரர் !📸
ஓய்வுபெறுகிறார் ஐநாவின் சமாதானப்படை வீரர் ரெஜிமெண்ட் சார்ஜன்ட் மேஜர் (RSM) எஸ்.ஐ.எம்.புஹாரி
ஓட்டமாவடியை0பிறப்பிடமாகவும் பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட,
எல்லோரோடும் இன்முகத்தோடு பழகும் அருமையான இராணுவ வீரர் சேகு இஸ்மாயில் முஹம்மது புகாரி எதிர்வரும் 28ம் திகதியுடன் தனது 22 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
1983ல் பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்யாலயத்திலும் அதன்பின் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
2003ல் சாதாரண இராணுவ வீரனாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர், தனது திறமையாலும், சிறப்பான சேவையாலும்
Private
Lance corporal
Corporal
Sargent
Staff Sargent
Warrant officer ll
Warrant officer l
ரெஜிமெண்ட் சாஜன் மேஜர் (RSM) வரை என பல்வேறு பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இந்தியாவில் 28வது ஜூனியர் போர் இராணுவ தலைமைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்ட இவர், பல வெளிநாடுகளிலும் விசேட பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.
லெபனானில் ஐக்கிய நாட்டு சபையின்
அமைதிகாக்கும் சமாதானப்படையணியில் (34 சர்வதேச நாட்டுப்படையணியுடன்) சிறப்பாக சேவையாற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் சிறப்பான சேவைக்காக இலங்கை இராணுவத்தால் 13 பதக்கங்களை வழங்கி கெளரவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற பதக்கம்
01. ரணாசூர பதக்கம்
02. உத்தம சேவா பதக்கம்
03. கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்
04. வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்
05. பூர்ண பூமி பதக்கம்
06. வடக்கு மற்றும் கிழக்கு செயல்பாட்டு பதக்கம்
07. இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் 1968
08. 75வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம்
09. 75வது இராணுவ ஆண்டு பதக்கம்
10. சேவாபிமானி பதக்கம்
11. சேவை பதக்கம்
12. விதேஷ சேவா பதக்கம்
13. ஐக்கிய நாடுகள் பதக்கம் (லெபனான்)
சிறந்த இராணுவ வீரனாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி, எமது மண்ணுக்கு பெருமை சேர்த்து எதிர்வரும் 2025.09.28ம் திகதியுடன் பதவி ஓய்வுபெறும் எஸ்.ஐ.எம்.புஹாரி அவர்களை எமது மண் சார்பில் வாழ்த்துவோம்.
-றியோ மஹ்றூப்












.jpeg
)





கருத்துகள் இல்லை