இலங்கை ஐனாதிபதி தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை சந்திப்பு!📸

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது


பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க நேரப்படி 23 ஆம் தேதி பிற்பகல் நியூயார்க்கில் உள்ள ஒன் பிளாசாவில் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவை சந்தித்தார்.


தென்னாப்பிரிக்க ஜனாதிபதியால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அன்புடன் வரவேற்கப்பட்டார்.


பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கின, இதன் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


இந்த சந்திப்பில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர் ஜெயந்த ஜெயசூர்யா மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் குழுவும் இணைந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.