டோகாவில் பதுங்கியிருந்த மூத்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைகள் சிதறின!
சற்றுமுன்னர் இஸ்றேலிய விமானப்படைகள் கத்தார் தலைநகருக்குள் புகுந்து பெரும் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இந்த தாக்குதலின் பிரதான இலக்காக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருப்பதாக அறியமுடிகின்றது.
இந்த தாக்குதல்குறித்து இஸ்றேல் உடனடியாகவே உரிமைகோரியுள்ளது!
ஏற்கனவே இஸ்றேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அவர்கள் காசாவைவிட்டு தப்பியோடி வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் அத்தனை ஹமாஸ் தலைவர்களையும் தாம் அந்த நாடுகளுக்குள் வைத்தே கொல்லுவோம் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கைவிடுத்து கூறியிருந்தார்.💥👈
தற்போதைய தாக்குதல் தொடர்பான முழு விபரங்கள் இன்னும் கிடைக்காவிட்டாலும்,தாக்குதலின் இலக்காக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ஒட்டுமொத்தமான பெரும் புள்ளிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலானது நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அவர்களினால் 👈ஹமாசிற்காக விடுக்கப்பட்ட கடைசி சந்தர்ப்பம் அடங்கிய எச்சரிக்கை டீல் தொடர்பான முடிவினை எடுப்பதற்காக ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்கள் மற்றும் அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கத்தாரின் தலைநகர் டோகாவில் ஒரு இரகசிய இடத்தில் ஒன்றுகூடியதாகவும்,அந்த ஒன்றுகூடிய கட்டத்தின்மீதே இஸ்றேலிய விமானப்படைகள் தற்போது துல்லியமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட அந்த ஒப்பந்த டீலினை ஏற்கனவே இஸ்றேல் ஆதரித்திருந்தநிலையில்’ ஹமாஸ் அந்த டீலை நிராகரிக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டநிலையில் டீலை பரிசீலித்துக்கொண்டிருந்த ஹமாஸ் தலைவர்களின் தலைகள்மீதே இஸ்றேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறி இஸ்றேல் இன்னொரு நாட்டின் தலைநகர்மீது நடத்தியிருக்கும் இந்த தாக்குதல் தொடர்பாக கண்டனங்கள் வரும் என்பதை தெரிந்துகொண்டே👈இஸ்றேல் நடத்தியிருக்கும் இந்த துணிகர தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.
நன்றி
“இஸ்றேலை நம்பினோர் கைவிடப்படார்”
கருத்துகள் இல்லை