நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!!


 


நபர் ஒருவருக்கு நுரையீரலில் பட்டாணிச் செடி வழர்ந்த சம்பவம் அமெரிக்காவில் பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், தனக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகமடைந்து மருத்துவமனையில்  பரிசோதனை செய்த போது புற்றுநோய் ஏற்படவில்லை என்பதுடன் அவரது நுரையீரலில் பட்டாணிச்செடி வளர்ந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள், இவ்வாறு நடப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றே நினைத்தோம், ஆனாலும் அவ்வாறு நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட குறித்த பட்டாணிச்செடி 1.25 cm அளவில் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.