கைகொடுத்து தூக்கி விட்ட தாய்மொழி தமிழ்!!
சமீப நாட்களில் தமிழ் குறித்து இங்கு அதிகம் பேசப்படுகிறது. தாய்மொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு ஒரு அனுபவபகிர்வை இங்கு தருகிறேன்.
மூன்றாண்டுகளுக்கு முன் வைத்தியசாலையில் அனுமதியாகிறேன். பின்னர் நடந்த இருதய சத்திர சிகிச்சையின் பின் hemoglobin, oxygen வழமைக்கு திரும்பவில்லை. Creatine அளவு அதிகரித்தே இருந்தது. விளைவு I became little anemic. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் என் வீட்டில் படியில் இறங்கி வரும் போது மூன்று படிகள் இருக்கும் போது விழுந்து விட்டேன்.
பக்கவாட்டில் விழுந்து உடல் திரும்பும் போது தலை அடிபட்டு விட்டது. இரண்டு நாட்களின் பின் ribcage இல் வலி காரணமாக அனுமதியானேன். தலை அடிபட்டால் முறையையும் Scan செய்தபோது இரத்த கசிவை கண்டு மேலும் சில நாட்கள் புதிய கசிவு உண்டா எனப் பார்த்து இல்லை என்ற பிறகு வீட்டுக்கு அனுப்பினர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவாறு அல்லாது மூளைக்குள் கசிவு மூளையை சற்று வீக்கம் அடையச் செய்ய மூளை சற்று நகர்ந்து விட்டது. முதலில் confusion அதிகரித்தது. பேச்சு குளறியது. திடீரென நடை நின்று போனது.
மீண்டும் விரைந்து எனது வழமையான உலகின் மூன்றாம் தர வைத்தியசாலைக்கு தூக்கிக் சென்றார்கள். Ambulance ஐ அழைத்தால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு தான் கொண்டு செல்வார்கள். அதனால் நானாகத் தான் ரோரன்ரோவில் உள்ள எனது வைத்தியசாலைக்கு செல்வது வழமை.
அங்கு மூளையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டாம் நாள் வைத்தியர்கள் குழு சத்திர சிகிச்சை வெற்றியா என்பதை உறுதி செய்வதற்காக வந்தார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். What's the day today? What's the date today? என்றார்கள். கேட்டது புரிந்தது. பதில் சொல்ல தெரியவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தேன். மனைவியிடம் கேட்டார்கள் ஆங்கிலம் தெரியாதா? என்று. அவர் சொன்னார் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வரும் துறைசார் வல்லுனர்களுக்கு குடிவரவுத்துறை சார்ந்து வழிகாட்டல் விரிவுரைகளை ஆற்றுவது தான் அவர் தொழில். அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் - it's look like the surgery failed. அப்போதும் நான் சிரித்துக் கொண்டேன். ஏனென்றால் நான் முதலில் பேசப் போவது என் தாய்மொழியில் தான் என்பதை தெரிந்து கொண்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று.
மூன்றாம் நாள் சிறிதாக தமிழில் பேச ஆரம்பித்தேன். நான்காம் நாள் மனைவி தனக்கு 19th Monday தனக்கு வேலையில் முக்கிய கூட்டம் உள்ளதால் அன்று வரமுடியாது என்றார். மறுநாள் 6 பேரைக் கொண்ட குழு வந்தது. அதே கேள்வி. திகதி என 19th என்றேன். நாள் என Monday என்றேன். ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். சரியாகத் தானே சொன்னேன் என எனக்குள் குழப்பம். அதில் ஒரு வைத்தியர் சொன்னார் today is Friday the 16th என்று. Language and memory யை இழந்திருந்த எனக்கு மனைவி சொன்னது தான் பதிவாகியிருந்ததே அன்றி அதைக் கடந்து சிந்திக்க முடியவில்லை.
அடுத்த குழு வந்து நடத்திப் பார்த்தார்கள் உதவியுடன் நடந்தேன். அப்போது சத்திர சிகிச்சை வெற்றி என்பதை ஏற்றுக் கொண்டார்கள். உடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றினார்கள்.
இங்கு முக்கிய விடயங்கள் என்னவென்றால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மொழிகளை இழக்கின்ற போது முதலில் வருவது தாய்மொழியே. இழக்கப்பட்ட நினைவுகளில் முதல் 6 மாதங்களில் எவை திரும்புகின்றனவோ அவையே பெரும் பாலும் நிலைத்து நிற்கும். 2 மாதங்கள் rehab என்றார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் எனப் போராடி 10ஆம் நாள் வெளியேறி வீடு திரும்பினேன். 6 நாட்களில் லண்டனில் இருந்து அம்மாவும் அக்காவும் வருவதற்கு முன் நான் வழமைக்கு திரும்ப வேண்டும் என்ற முயற்சியில் வீடு திரும்பி 5ஆம் நாள் எவ்வித உதவியும் இன்றி நடந்தேன். மொழிகள் சரளமாக வந்தன. நினைவுகள் முழுமையாக திரும்பியிருந்தன. தலையில் மட்டும் 45 staples மின்னிக் கொண்டு இருந்தன. 6 வாரங்களின் பின்னர் தான் அவற்றை அகற்றினர். இவை எவ்வாறு சாத்தியமாயின என்பதை இன்னுமொரு பதிவில் சொல்கிறேன். ஆனால் மூளை சத்திர சிகிச்சையின் பின் நடந்த அதிசயம். இருதய சத்திர சிகிச்சையின் பின் மீளாத hemoglobin, oxygen அளவுகள் சிறப்பாக வழமைக்கு திரும்பின. Creatine அளவும் சிறப்பான நிலைக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் மூளை சத்திர சிகிச்சையகல் மகிழ்ச்சியே.
கருத்துகள் இல்லை