ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் கடமையேற்பு!


ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்) அவர்கள் நேற்று(03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் முன்னிலையில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


புதிய பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினமே ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தனது பணிகளை பொறுப்பேற்று செயற்படத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.