காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03.09.2025) பிற்பகல் 1.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், இந்தியா – இலங்கை கடற்போக்குவரத்துடன் இணைந்து கப்பல் மூலமாக பொருட்களை கொண்டுவருதல், இங்கிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள், அதனால் உருவாகும் தொழில்வாய்ப்புகள், சாதக–பாதகங்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும், துறைமுக அபிவிருத்திக்கான காணித் தேவைப்பாடு, பிராந்திய இணைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகத்தை எளிதாக்குதல், வேலைவாய்ப்புகள், சுற்றுலாத்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல் தாக்கம், சமூக நடத்தையில் மாற்றங்கள், அரச மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகிய அபிவிருத்திசார் அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் உதவி முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ஜெ.ஏ. சந்திரரத்ன, பிரதம பொறியியலாளர் திரு. சி.எல். தசநாயக்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பி. கெட்டியாராய்ச்சி, பிரதம பொறியியலாளர் திரு. எஸ்.எச்.எம்.பி. அபயசேகர, நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. தேவசுரேந்திரா, பிரதம பொறியியலாளர் திரு. கே.ஆர்.என்.என்.எம். காரியவசம், யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்நிரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை