ஐக்கிய இராச்சியத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை!
நேற்றைய தினம் அதாவது செப்டெம்பர் 13ஆம் திகதி லண்டனில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன .
" The United Kingdom “ என்கிற பெயரில் ஒரு ஆர்ப்பாட்டம் . "Stand UP To Racism " என்கிற பெயரில் ஒரு ஆர்ப்பாட்டம் .
"The United Kingdom " என்கிற பெயரில் அதாவது குடியேற்றவாதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் இங்குள்ள மக்களினை பாதிக்கிறது என்றும் உடனடியாக குடியேற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்லி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150 000 பேர் கலந்து கொண்டிருந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன .
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக , எல்லோரும் சமம் என்கிறதை வலியுறுத்தி நடைபெற்ற " Stand Up To Racism " என்கிற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்னிக்கை 5000 .
1500 மேற்பட்ட காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்ய ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் . The United Kingdom " என்கிற பெயரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லை மீறி Stand Up To Racism ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை நோக்கி செல்ல முனைந்தமையை , அடக்க முற்பட்டிருந்த பல காவல்துறையினர் காயமடைந்தனர் . 25 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
42 வயதுடைய டொமி றொபின்சன் என்கிறவரே இந்த "The United Kingdom " என்கிற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் . ஆனாலும் எலன் மாஸ்க் LED திரையூடாக உரையாற்றியிருந்தார் . கட்டுப்பாடு இல்லாமல் குடியேற்றவாதிகள் உள் நுழைவதன் ஆபத்தை குறிப்பிட்டு பேசிய அவர் " ஐக்கிய இராச்சியத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை " என்று குறிப்பிட்டார் .
பக்கத்தில் நடைபெற்ற "Stand Up To Racism “ என்கிற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் டயான் அபேர்ட்
" இனவெறி , வன்முறை மற்றும் பாசிசம் என்பவை எமக்கு புதிதல்ல . எப்போதும் நாம் அவற்றை தோற்கடித்துள்ளோம் " என்றும் குறிப்பிட்டிருந்தார் .
கருத்துகள் இல்லை