மாறுவேடமிட்டு ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் - அஜித் தர்மபால!
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அஜித் தர்மபால, பாதுகாப்பு காவலர் வேடமணிந்த ஒரு கொலையாளி மூலம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவுடன் ஒரு ஒன்லைன் சேனலில் கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை வெளியிட்ட அஜித் தர்மபால, கொலை சதித்திட்டம் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அல்லது வேறு பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்டுக் கொண்டிருக்கும் நபர் மூலம் இந்தப் படுகொலை நடத்த திட்டமிடப்பட்டதாக மிகவும் நம்பகமான மூலத்திலிருந்து தகவல் கிடைத்ததாகவும் திரு. தர்மபால மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை