சிறந்த வீட்டு நூலகத்திற்கான போட்டிகள்!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரசபையின் சாவகச்சேரிப் பொதுநூலகத்தினால் சிறந்த வீட்டு நூலகத்திற்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, வீட்டிலேயே சிறிய நூலகம் ஒன்றை உருவாக்கி பராமரிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் போட்டி விதிமுறைகளாக
வீட்டில் ஒரு அலுமாரி அல்லது சிறிய ராக்கை அமைத்து நூலகம் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்,
பயனுள்ள, பொழுதுபோக்கான மற்றும் துறை சார்ந்த நூல்கள் அடங்கியிருத்தல் வேண்டும்,
குறைந்தது 100 நூல்களையாவது சேர்த்து வைத்திருத்தல் வேண்டும்.,
நூல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டும் இருத்தல் வேண்டும்,
நூலகம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடியவாறு இருத்தல் வேண்டும்.,அத்துடன்
சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிப்பவர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
எனவே வீட்டில் நூல்களை வைத்துப் பராமரிப்பவர்கள் தங்களுடைய பெயர்,
வீட்டு நூலகத்தின் படம்,
மற்றும் முகவரியை இணைத்து chavakachcheripubliclibrary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் ஊடாகவும்,
சாவகச்சேரி பொது நூலகம் என்னும் முகநூல் பக்கத்தில் குறித்த முகநூல் பதிவின் கருத்து பகுதியில் (Comment Section) தங்களுடைய விவரங்களை இடுவதன் மூலமும் அத்துடன் நூலகர்,பொது நூலகம்,சாவகச்சேரி என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பியும் அல்லது அலுவலக நேரங்களில் நேரடியாக சாவகச்சேரி பொது நூலகத்திற்கு வருகை தந்தும் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15.10.2025 க்கு முன்னராக விண்ணப்பிக்க வேண்டும் எனவும்
2025 ஆம் ஆண்டின் சிறந்த வீட்டு நூலகமாக தெரிவு செய்யப்படும் வீட்டு நூலகத்துக்கான பரிசு தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வில் வழங்கப்படும் எனவும் நூலகர் தெரியப்படுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை