வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த முச்சக்கர வண்டி.!
இன்று 11.10.2025 மாலை 1.45 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கத்திற்கு அருகில் ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை