யேர்மனி அண்ணாவின் மறைவுக்கு த.தே.ம.மு. ஆழ்ந்த இரங்கல்கள்.!
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில்பேளின் நகரில் கடந்த நான்கு தசாப்பதங்களாக வாழ்ந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக அற்பணிப்புடன் உழைத்துவந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சிறீ அண்ணா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அண்ணன் யோகராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தியறிந்து பெருந்துயரடைகின்றோம்.
சிறீ அண்ணாவுடன் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் ஏற்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியப் பயணத்தில் அவருடன் தொடர்ந்து பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியது. தேசியத் தலைவரையும் விடுதலைப் போராட்டத்ததையும் ஆழமாக நேசித்த அவர் தேச விடுதலையை தன் உயிர்மூச்சாக கொண்டு செயற்பட்டுவந்தார்.
மிகுந்த மனோபலத்துடன் செய்பட்டு வந்தார். 2009 பேரழிவின் பின்னரும் கொள்கை உறுதியோம் பயணிக்கும் எமக்கு பக்கபலமாக கடந்த 15 ஆண்டுகளாகவே செயற்பட்டுவந்தார்.
அவர் உயிராக நேசித்த அவரை உயிராக நேசித்த அவரது அன்பு மனைவி மனைவியின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்திருந்தது. அந்த சோகத்திலிருந்து வெளிவரமுடியாமலே அவர் எம்மை விட்டு பிரந்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புலம்பெயர் தேசத்து தாங்குதூண்களில் ஒன்றை எமது இயக்கம் இழந்துள்ளது. இவரது இழப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்க ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை