புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு சில சீரற்ற சமூகச் செயற்பாடு!
புலம்பெயரும் தமிழர்கள் தமது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தாங்கள் குடியேறவிருக்கும் புதிய நாட்டை மிகத் தீர்க்கமாகவும், வியூகத்துடனும் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
இலங்கையை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கும்போது, தமது நலன்களுக்குச் சாதகமான பல காரணிகளை அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள்.
முக்கியத் தெரிவுக்கான காரணிகள்:
வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம்: நிலையான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் உயர்வான வாழ்க்கைச் சூழல்.
சுகாதாரம் மற்றும் மருத்துவம்: தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள்.
பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி: சிறந்த கல்வி வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான சூழல்.
ஓய்வூதியம் மற்றும் இறுதிக்காலப் பாதுகாப்பு சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவை.
தமிழர்களில் உயர் கல்வி மற்றும் ஆங்கிலப் புலமை கொண்டோர் பெரும்பாலும் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தமது முதன்மைத் தேர்வாகக் கொள்கின்றனர்.
இந்த நாடுகள், பட்டதாரிகள் மற்றும் கல்விமான்களின் சாதகமான புகலிட நாடுகள் (Favourite Destinations) எனப் பார்க்கப்படுகின்றன.
இதேபோல, வேலைவாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக நலன்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சுவீடன், நோர்வே போன்ற ஸ்காண்டினேவிய நாடுகளைத் தெரிவு செய்கின்றனர்.
இங்குள்ள மொழியியல் சவால்கள் இருந்தபோதிலும், தமது முன்னேற்றத்திற்காக அம்மொழிகளைக் கற்றுக்கொள்வதில் இவர்கள் முதலீடு செய்கின்றனர்.
ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளைத் தெரிவு செய்வோரும் குறிப்பிடத்தக்க அளவில் கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தமது புதிய நாட்டில் நிலைபெறத் தேவையான அடிப்படை அறிவையும், அர்ப்பணிப்பையும் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பிரான்சில் நிலைமை சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. பிரான்சில், குறிப்பாக ஆரம்ப மட்டத் தொழில்களில், பிரெஞ்சு மொழிப் புலமை என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாமலிருக்கலாம்.
இங்குள்ள அடிமட்டத் தொழில்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் இருப்பதன் காரணமாக, இலங்கையில் முறையான கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் சமூகரீதியாகக் குறைந்த பின்னணியைக் கொண்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் அதாவது ஊரில் பள்ளிகூட பக்கம் போகாததுகள், காவாலியா ஊர் சுத்தினதுகள், கஞ்சா அடிச்சு திரிஞ்சதுகள் ,சங்கிலி அறுத்ததுகள், கசிப்பு காய்ச்சி வித்ததுகள், ஆட்களை தட்டிச்சுத்தினதுகள், பொட்டுப்பிரிச்சு இறங்கி ஆட்டையப் போட்டதுகள் என ஊர்ல கழிவுகளா சுத்திக் கொண்டு திரிஞ்சதுகள் எல்லாம் வெளிநாடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால், அவர்கள் நேரடியாகப் பிரான்ஸை தெரிவு செய்யும் போக்கு காணப்படுகிறது.
குறிப்பாகப் பாரிஸில் உள்ள "லா சப்பல்" (La Chapelle) போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளில், குடியேறிய தமிழ்ச் சமூகத்தினரிடையே கல்விப் பின்னணியற்ற மற்றும் சமூக ரீதியாக சவாலான பின்னணிகளைக் கொண்டோர் அதிகமாகக் காணப்படுவதாக அவதானிக்கப்படுகிறது.
அந்த ஏரியாவில சுத்துறதுகள் எல்லாம் “அஞ்சறிவு கூட்டம்”. பள்ளிக்கூடம் என்றால் “அதென்ன சாப்பிடுற சாமானோ” என்று கேட்பார்கள், அதிவிசேட மொக்கு கூட்டம், ஆட்டு மந்தைக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
இந்தச் சமூகப் பிரிவினர் முறையான கல்வித் தகைமைகள் இல்லாததினால், ஏனைய புலம்பெயர்ந்தோருடன் ஒப்பிடுகையில், சமூகத் தொடர்பாடல் மற்றும் வளர்ச்சி விடயங்களில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய சமூகச் சூழல், அங்குள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு சில சீரற்ற சமூகச் செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதாகவும், அது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் பொதுப் பிம்பத்தைப் பாதிப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.
இந்தச் சவாலான பின்புலத்தைச் சேர்ந்தவர்களுடன் அதாவது இந்த தற்குறி Pro maxகளுடன் அர்ஜுனா இராமநாதன் நேற்றைய தினம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை