பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் “சங்கமம்” ஊழியர் தின விழா -15.10.2025!
துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாய் தன் பொன் அகவை நிறைவில் பூரித்து நிற்கும் இவ்வேளையில், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஊழியர் கௌரவிப்பு மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தி
வரைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஊழியர் சங்கம் ஆண்டு தோறும் கொண்டாடும் ஊழியர் கௌரவிப்பு மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வை, இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடு கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிகிறேன். இந்த அர்த்தமிக்க நாளில் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும். நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பாதையில் ஊழியர் சங்கத்தின் வகிபாகம் முக்கியமானதொன்றாகும். பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தின் உறுதியான தூண்களாக விளங்குபவர்கள் அதன் ஊழியர்களே. பல்கலைக்கழகமொன்றின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதற்கு அதன் பின்னால் அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஊழியர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. கல்வி, நிர்வாகம், பராமரிப்பு சேவைகள், மாணவர் நலனோம்பு, மற்றும் ஏனைய அனைத்துத் துறைகளிலுமுள்ள ஊழியர்கள் அனைவரும் தங்கள் கடமைகளைச் சிரத்தையுடனும், ஒழுக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்றி வருவது எமது பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான முன்னேற் றத்திற்கும். ஒத்துழைப்பும், ஒற்றுமையும் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு சாதனையிலும் பிரதிபலிக்கிறது.
தொழில்முறைப் பொறுப்புணர்வு, மனித நேயம் மற்றும் கூட்டாகச் செயற்படும் ஆற்றல் என்பன கல்வி நிறுவனங்களின் வலிமையான அடித்தளமாக விளங்குகின்றன. இவ்வாறான பண்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் அனைவரும் உண்மையிலேயே பாராட்டத்தக்கவர்கள். இந்த ஊழியர் கௌரவிப்பு மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு உங்கள் ஒத்துழைப்பையும் உற்சாகத்தை யும் மேலும் வலுப்படுத்தி, பல்கலைக்கழகத்தின் இலக்குகளை அடை வதற்கான புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் நாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
சங்கத்தின் மகுட வாசகமாக இடம்பெற்றிருக்கும் "ஒன்றுபட்டு நிற்போம்" என்ற கோசத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக பல்கலைக்கழகத் தாயின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உழைக்க எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் பெருங்கருணை துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா,
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
---------------------------------------------------------------------------=---
பதிவாளரின் வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் "சங்கமம் 2025" தனது ஆண்டு விழாவை இவ்வாண்டும் சிறப்பாக நடத்துவதில் மனமார்ந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல்கலைக்கழக ஊழியர் களின் நலன்களுக்கும், உரிமை பாதுகாப்பிற்கும் மட்டுமல்லாமல், ஒற்றுமை, நல்லிணக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றிற்கும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பெருமளவு பங்களித்து வந்துள்ளது. இந்நிகழ்வு, அந்த ஒற்றுமையின் ஒரு சிறப்பான வெளிப்பாடாகும். இந்த விழாவில், ஓய்வுபெற்ற பணியாளர்களும், 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்களும், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் வெற்றி பெற்ற பிள்ளைகளும், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி யோரும் கௌரவிக்கப்படுவது, சங்கத்தின் உயர்ந்த பண்புக ளையும், நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
திருக்குறள் கூறுகிறது:
"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்தும் செயல்." (குறள் 516)
எமது ஊழியர்கள் தங்கள் அர்ப்பணிப்பாலும் உழைப்பாலும்
பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை தினசரி உறுதிசெய்து வரு கின்றனர் என்பதற்கான சான்றிதழாக இந்நிகழ்வு திகழ்கிறது. இவ்வாண்டு எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50 ஆவது ஆண்டு பயணத்தை பொன்விழாவை கொண்டாடுகிறது என் பது மற்றொரு பெருமை. கடந்த அரைநூற்றாண்டு காலமாக கல்வி, ஆராய்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் எமது பல்கலைக் கழகம் வடமாநில மக்களின் பெருமையாக இருந்து வந்துள்ளது.
இதன் பின்னணியில், ஊழியர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அடித்தளமாக உள்ளன. பாரதியார் பாடியுள்ளார்:
“நம்மை ஒன்று சேர்க்க நம்மிடையே காதல் வேண்டும் நம்மை உயரச் செய்ய நம்மிடையே ஒற்றுமை வேண்டும்."
அந்த ஒற்றுமையே எமது ஊழியர் சங்கத்தின் உயிர் மூச்சாகவும், பல்கலைக்கழகத்தின் பெருமையாகவும் திகழ்கிறது. உங்கள் சங்கத்தின் "சங்கமம் 2025" விழா நன்றியுணர்வும், ஊக்கமும், ஒற்றுமையும் நிறைந்த சிறப்பான நிகழ்வாக அமைய வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஒற்றுமை என்பது சங்கத்தின் பலம் அர்ப்பணிப்பு என்பது பல்கலைக்கழகத்தின் பெருமை.” இந்த பலமும் பெருமை யும் என்றும் நிலைத்திருக்கட்டும்! இணைந்த கைகளால் வாழ்த்தும்,
வி.காண்டீபன்,
பதிவாளர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
---------------------------------------------------------------------------=---
பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவரின் செய்தி
எமது ஊழியர்கள் தம் நிறுவனத்திற்காக உழைத்து வெள்ளி விழாக்காணும் இத்தருணத்தில் கார்ள்மார்க்ஸின் அந்நியப்படுத்தல் எனும் தத்துவக் கருத்தில் குறிப்பிட்டது போன்று (Economic and Philosophic Manuscripts of 1844) எமது அங்கத்தவர்களும் இந்நிறுவனத்தின் ஓர் அங்கமென எண்ணாத மனநிலை எமது நிர்வாகத்தில் காணப்பட்டாலும், நிர்வாக வளர்ச்சிக்கு தமது பாரிய உழைப்பை வழங்கி இருப்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இவர்களுடைய பணி, உடல், உள, ஆரோக்கியம் மேலும் சிறப்புற சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
ஓய்வுபெறும் பெரும்பாலானவர்கள் தமது இளமைக் காலத்தை முழுவதுமாக எமது பல்கலைக்கழக முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம். எமது சங்கம் இவ்வாறு நெஞ்சை நிமிர்த்தி ஒழுக்கத்துடன் உண்மைக்கும், எமது சமூகத்திற்கும் குரல் கொடுக்கும் அமைப்பாகத் திகழ்வும் நிறுவனத்திற்கு கெடுதி இழைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதற்கும் காரணமாக இருந்த எமது மூத்த தலைவர்களையும், வழிகாட்டிகளையும் ஊழியர் சங்கம் சார்பாக வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறோம். இன்றைய 'இந்த உலகு நமக்கு மட்டுமல்ல எமது எதிர்காலத்துக்குமானது' என உலகு கூறும் அதே உண்மையை என்றோ மெய்ப்பிக்கும் விதத்தில் புலமைப் பரிசில் சித்தியெய்திய எம் உறுப்பினர்களின் பிள்ளைகளை வாழ்த்தி உற்சாகப்படுத்தி கௌரவித்து வருகின்றோம். அவ்வகையில் அவர்கள் மென்மேலும் கல்வியுடன் ஞானத்தையும் பெற்று வளர வாழ்த்து கிறோம். அத்தோடு அவர்களது வளர்ச்சிக்கு எமது சங்கம் தோள் கொடுக்கும் என உறுதியளித்து வாழ்த்துகிறோம்.
பொ.தை.ய.யசோதன்,
தலைவர், பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.
------------------------------------------------------------------------
💠 ஒன்றுபட்டு நிற்போம் – சங்கம வாழ்த்துக் கவிதை 💠
தாய் பல்கலைக் கழகம் தழைத்திடும் பூமி,
தொழிலின் தெய்வம் தங்கும் தோட்டமிது நாமே!
உழைப்பின் வியர்வைச் செழிப்பாகும் நிலம்,
உணர்வின் தீபம் ஒளிர்த்திடும் மிலிர்மதி நாமே!
அறிவின் அரண்மனை தாங்கும் தூண்கள் நாமே,
அன்பின் அடித்தளம் ஆக்கும் கைகள் நாமே!
கற்பனையின் கடல் கரையில் நின்று,
கற்றலின் முத்துக்களைச் சேகரிக்கும் மாமனிதர் நாமே!
நெஞ்சில் ஒற்றுமை, நெறியில் ஒழுக்கம்,
நேற்றை நினைத்து நாளை வளர்க்கும் பாசம்,
அர்ப்பணத்தின் அருவி, உறுதியின் உச்சி,
அனைத்தும் நம் ஊழியர் இதயங்களிலே நனையும்!
பல்கலைக்கழகத் தாயின் குரல் கேட்டோமே —
“என் வளர்ச்சிக்கு உழைத்தோர்களே, நீங்கள்தான் எனது பெருமை!”
அதனால்தான் இன்றைய நாள் புனிதமாய் மலர்கிறது,
சங்கமம் எனும் மலர் மாலையாய் இணைகிறது.
“ஒன்றுபட்டு நிற்போம்” – கோசம் அல்ல அது,
உயிரின் ஓசை அது, ஒற்றுமையின் இசை அது!
பார்வதி சமேத பரமேஸ்வரன் அருள் பொழிய,
பணியும் புனிதம், பண்பும் பிரகாசம் ஆகட்டும் வாழ்வில்!





.jpeg
)





கருத்துகள் இல்லை