வெளியீட்டு உதவித் திட்டம்!


தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் 
வெளியீட்டு உதவித் திட்டத்திற்காக கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவித் திட்டம் 2026 இற்கான கையெழுத்துப் பிரதிகள் 2025 செப்டம்பர் 22 முதல் 2025 டிசம்பர் 31வரை பெற்றுக்கொள்ளப்படும்.

வெளியீட்டு உதவித் திட்டத்தின் கீழ், கல்வியியல், ஆராய்ச்சி, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், இளையோர் இலக்கியங்கள் மற்றும் சிறுவர் படைப்புகளுக்கு உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளுக்கு ரூ. 150,000ம், நாவல்களுக்கு ரூ. 125,000ம், சிறுகதைகளுக்கு ரூ. 100,000ம், கவிதைகள், இளையோர் இலக்கியங்கள் மற்றும் சிறுவர் படைப்புகளுக்கு ரூ. 75,000 ம் மற்றும் பல்வேறுப்பட்ட படைப்புகளுக்கு ரூ. 100,000 மும் மானியமாக வழங்கப்படும். இப் படைப்புகள் அனைத்தும் 2026 இலக்கிய மாதத்திற்கு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் கொழும்பு 7, சுதந்திர வழியில் அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபைக்கு வருகை தருவதன் மூலம் அல்லது 0112-687583 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அல்லது www.natlib.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், Pub@mail.natlib.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.