என் தூக்கமும் எங்கோ தொலைந்துதான் போகிறது..!

 


நான் 

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

அதில்

சிறிதளவேணும்

எனக்கான

சிந்தித்தலில் நானில்லை 


யார் யாரோவெல்லாம்

வருகிறார்கள்

துயர்கூறி

கண்ணீரை ஒப்புவிக்கிறார்கள் 


எவரென

தெரியாதோர்க்கெல்லாம்

ஏனோ 

ஓடிக்கொண்டே இருக்கிறேன்

  

என் இரவுகளை

களவாடிச் செல்லும்

பலரது துயரத்தின் கதையில் 


ஒரு கோப்பை தேநீர்

மெல்லிசைப் பாடல்கள்

நட்சத்திரங்களின் ரசித்தலென


என் தூக்கமும்

எங்கோ

தொலைந்துதான் போகிறது..! 


#பிரபா அன்பு

@highlight



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.