இலங்கையில் தங்கத்தின் விலையில் 20,000 ரூபாய் குறைப்பு!
நேற்று (அக்டோபர் 18) இலங்கையில் தங்கத்தின் விலையில் 20,000 ரூபா வரை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலமாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு, நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
செட்டித்தெரு சந்தை நிலவரம்:
கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நேற்று (அக்டோபர் 18) தங்கத்தின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
தங்கம் வகை விலை (ரூபா) (அக். 17) விலை (ரூபா) (அக். 18) விலை வித்தியாசம்
ஒரு பவுண் 24 கரட் 410,000/- 390,000/- 20,000/- குறைவு
ஒரு பவுண் 22 கரட் 379,200/- 360,800/- 18,400/- குறைவு
நேற்று முன் தினம் 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை, நேற்று 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாகக் குறைந்துள்ளது.
இதேபோன்று, நேற்று முன் தினம் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாவாக இருந்த ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையும், நேற்று 3 இலட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாவாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணயச் சந்தை மற்றும் உள்ளூர் டொலரின் பெறுமதி ஆகியவற்றின் மாற்றங்களே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைச் சரிவு தற்காலிகமானதா அல்லது நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை