யாழ் வைத்தியசாலை படுகொலை,!


 யாழ் 1987-10-21 சிதறிய உடலங்கள் இரத்தம் ஆறாக ஓடியது,


யாழ் வைத்தியசாலை படுகொலை,


சாவகச்சேரி படுகொலையில் காயம் அடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல மக்கள் வாகனங்களை தேடினார்கள், இதன் விளைவாக மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தது, மருத்துவமனையில் இந்த நெருக்கடியில் நானும் உதவ முன்சென்றேன்


 யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கூடுதலான வசதிகள் இருந்த போதும் அங்கே செல்ல காயப்பட்ட பொது மக்கள் மறுத்தார்கள் ஒருவாரம் முன்னதாக அதாவது ஒக்டோபர் 21ம் திகதி அன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் இடம் பெற்ற படுகொலையால் மக்கள் பீதியடைந்து இருந்தார்கள் அந்த மருத்துவமனைக்குள் இந்திய படையினர் நுழைந்து காட்டு மிராண்டிதனமாக படுகொலைகள் புரிந்தபோது மருத்துவர்கள் தாதியர்கள் பணியாளர்கள் என்று 21 பேர் அங்கு கொல்லப்பட்டு இருந்தார்கள்


 இந்திய படையினர் மருத்துவமனைக்குள் சென்று தானியங்கி துப்பாக்கிகளால் சிலாவிச் சுட்டு நோயாளர்கள் மீதும் மருத்துவ பணியாளர்கள் மீதும் எறிகுண்டுகள் வீசி வெறியாட்டம் ஆடினார்கள், அந்த இந்திய வெறியாட்டத்திற்கு உதவியாக, மோட்டார் எறிகணைகளும் ஏவப்பட்டன, மருத்துவமனை சுவர்களை அவை துளைக்க புகையும் தூசியும் அங்கே நிரம்பி வழிந்தன, சமாதானத்தையும் சரணடைவதையும் உணர்த்தும் வகையில் மருத்துவ பணியாளர்கள் கைகளை உயர்த்தி தூக்கியபடி நின்றபோதும், இந்திய அமைதி படையினர் நேரெதிரில் நின்று சுட்டு வீழ்த்தி எறிகுண்டுகளையும் அவர்கள் மீது வீசினார்கள், 


 இந்திய இராணுவ காட்டுமிராண்டி தாக்குதலில் மருத்துவமனை பணியாளர்கள் நோயாளர்கள் 51 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள், இந்த நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல தயங்கியதன் நியாயத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.