பேனா துப்பாக்கியுடன் 23 வயது இளைஞன் கைது!
நாகொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களை வைத்திருந்த 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாகொட பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (06) மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவில் வடிவமைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதுடன், ஒற்றை தோட்டாவைச் சுடக்கூடிய தானியங்கித் துப்பாக்கியாகும்.
அத்துடன், பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்த இரண்டு தோட்டாக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஐந்து தோட்டா உறைகளையும் இளைஞனிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாபலகமவைச் சேர்ந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை