வடக்கில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகளிடம் ஒரு கேள்வி.!




இன்று நீங்கள் செய்த பணிப் பகிஸ்கரிப்பு என்பது உங்களது ஜனநாயக ரீதியான உரிமை. ஆகையால் அதைப்பற்றி நான் எதுவும் கூறமாட்டேன்.


இன்றையதினம் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றன. ஆனால் நீங்கள் பொறுப்பெடுத்த வழக்குகளில் நீங்கள் ஆஜராகவில்லை. அதனால் இன்றைய வழக்குகள் வேறொரு தினத்துக்கு திகதியிடப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய வழக்குகளுக்குரிய பணத்தை வழக்காளிகளிடமிருந்து ஏற்கனவே பல சட்டத்தரணிகள் பெற்றிருப்பீர்கள். அது உங்களது நடைமுறை ஆகையால் அதுவும் பிரச்சினை இல்லை.


ஆனால் நீங்கள் பெற்ற பணத்துக்கான வேலையை இன்றையதினம் செய்யவில்லை. அந்தவகையில் இன்றையதினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வேறொரு தினத்துக்கு திகதியிடப்பட்ட வழக்குகளுக்கு கட்டணத்தை வாங்காமல், இன்றைய தினத்துக்காக பெறப்பட்ட கட்டணத்தினை அதற்காக ஈடு செய்து உங்களது பணியை செய்வீர்களா? அப்படி செய்தால் மக்களும் உங்களை மனிதாபிமானம் உள்ளவர்களாக கருதுவார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.