சாணக்கியனுக்கும் சாமர சம்பத்திற்கும் என்ன தொடர்பு?
இன்றைய தினம் பாராளுமன்றில் சிறீதரன் எம்பிக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை செய்திருக்கிறார் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று பிணையில் வெளியே வந்திருக்கும் சாமர சம்பத் என்ற மொட்டுக்கட்சி எம்பி.
விடயம் என்னவென்றால், இலங்கையின் அதி உயர் பதவிகளுக்கு உரிய நபர்களை நியமனம் செய்யும் குழுவின் பெயர் “அரசியலமைப்பு சபை”. இந்த குழுவின் வரலாற்றில் முதலாவது தமிழ் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் சிறீதரன் எம்பி. அதுவும் இந்த அரசியலமைப்பு சபைக்கு பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக உள்ளக தேர்தல் மூலம் வென்று தெரிவு செய்யப்பட்டவர் தான் சிறீதரன் அவர்கள்.
அரசியலமைப்பு சபைக்கு, ஆளும் கட்சி சார்பாக 3 பேர், எதிர்க்கட்சி சார்பாக 3 பேர், பொதுமக்களில் இருந்து 3 பேர் மற்றும் சபாநாயகர் என மொத்தம் 10 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். எதிர்க்கட்சியில் பிரதான எதிர்க்கட்சிக்கு 2 உறுப்பினர்களும், மிகுதி தனித்தனியாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவர் என தெரிவு செய்யப்படுவார்கள்.
2024ஆம் ஆண்டு 10ஆவது பாராளுமன்ற தேர்தலில் பின் புதிய அரசியலமைப்பு சபை தெரிவு செய்யப்பட்டது. அதில் 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்கள். 10ஆவது உறுப்பினராக எதிர்க்கட்சியில் பிரதான எதிர்க்கட்சியான SJB ஐ தவிர்த்து மிகுதியாக உள்ள 23 எம்பிக்களில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
23 எதிர்க்கட்சியில் அதிகமாக 8 உறுப்பினர்களை கொண்ட தமிழரசுக்கட்சி தமது கட்சி சார்பாக பாராளுமன்ற குழுத்தலைவர் சிறீதரன் அவர்களை முன்மொழிவது என தீர்மானித்தது. அப்போது தன்னை அரசியலமைப்பு சபைக்கு முன்மொழியுமாறு பதவி ஆசையில் சாணக்கியன் தமிழரசு எம்பிக்கள் கூட்டத்தில் கேட்டார். ஆனால் அதற்கு தமிரசுக்கட்சியின் எம்பிக்கள் பெரும்பான்மையானோர் சம்மதிக்கவில்லை. அதனால் சிறீதரன் அவர்களே தீர்மாணிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் 10 ஆவது உறுப்பினர் தெரிவு வந்த போது தமிழரசுக்கட்சி சார்பாக கோடீஸ்வரன் எம்பி சிறீதரன் எம்பியை முன்மொழிய கஜேந்திரகுமார் வழிமொழிந்தார். சிறீதரன் எம்பிக்கு எதிராக ஜீவன் தொண்டமான் எம்பியை நாமல் ராஜபக்ச முன்மொழிய ரவி கருணாநாயக்க வழிமொழிந்தார். அதனால் ஒருவரை தெரிவு செய்ய தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பட்டது.
23 எம்பிக்களில் இரண்டு பேர் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 21 பேர் வாக்களிப்பிற்கு தகுதி பெற்றிருந்தார்கள். நடைபெற்ற வாக்களிப்பில் 8 உறுப்பினர்களு கொண்ட தமிழரசுக்கட்சியில் 7 உறுப்பினர்களும், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், மஸ்தான், முஸ்லீம் காங்கிரசின் அப்துல் வாசீத் ஆகிய 11 பேர் சிறீதரன் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.
சிறீதரனுக்கு எதிராக போட்டியிட்ட ஜீவன தொண்டமான் அவர்களுக்கு ஆதரவாக தமிழரசுக்கட்சியின் சாணக்கியன், நாமல் ராஜபக்ச, ரவி கருணாநாயக்க, சாமர சம்பத் முதலிய 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தார்கள். 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிறீதரன் அரசியலமைப்பு சபைக்கு வரலாற்றில் முதலாவது தமிழ் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இது தான் ஆரம்ப விடயம். இந்த பலம்பொருந்திய அரசியலமைப்பு சபைக்கு தன்னை செல்லவிடாத சிறீதரனை பழிவாங்க வேண்டும் என்று தான் தன் சொந்த கட்சிக்காரனை தோற்கடிக்க எதிர்க்கட்சிக்கு சாணக்கியன் வாக்களித்தார்.
இந்த நிலையில் இன்று குறித்த அரசியலமைப்பு சபையில் சிறீதரன் ஆளும்கட்சி சார்பாக செயற்படுகிறார் என்று புதுப்பரணி அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவரை அரசியலமைப்பு சபையில் 11 தடவை வாக்களிப்பு வந்திருக்கிறது. அதில் 3 தடவைகள் ஆளும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக தான் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிக்கும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்றில்லை. ஆளும் தரப்பு செய்யும் சரியான விடயங்களுக்கு ஆதரவாக இருப்பது தப்பில்லை.
இன்று பாராளுமன்றத்தில் 55 மில்லியல் ஊழல் மோசடியில் ஆதாரத்தோடு பிடிபட்டு சிறை சென்று பிணையில் வெளிவந்திருக்கும் சமார சம்பத் சிறீதரன் அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக அரசியலமைப்பு சபையில் செயற்படுகிறார் என்று ஒரு முறைப்பாட்டை கொண்டுவந்தார். அதை சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்துவிட்டார்.
இந்த முறைப்பாட்டை சாமர சம்பத்தோடு முன்நின்று செயற்படுத்தியது சாணக்கியன். சாணக்கியனும் சாமர சம்பத்தும் 2018 இற்கு முன் மகிந்த ராஜபக்கசவோடு ஒரே கட்சியில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனால் தான் இந்த நெருக்கம்.
முறைகேடாக சொத்து குவித்தது என்று நிதிக்குற்றவியல் புலணாய்வுப்பிரிவு வெளியிட்ட 20 பேர் கொண்ட பட்டியலில் சாணக்கியனும் இருக்கிறார். இப்போது சாணக்கியனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதை மூடிமறைக்கவே இந்த புதுப்புரளியை சாணக்கியன் தரப்பு கிளப்பியிருக்கிறது.
முறைப்பாட்டில் சிறீதரனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் முறைப்பாடு இருக்கிறது அதனால் அந்த பதவியில் இருக்க முடியாது அவர் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த முறைப்பாட்டை கொண்டுவந்த சாமர சம்பத் ஊழல்வாதி என்று நீதிமன்று தடுப்புக்காவலில் வைத்தது. பிணையில் தான் இப்போது வெளியில் இருக்கிறார். தீர்ப்பு வர உள்ளே செல்லுவார். சாணக்கியன் மோசடியாக சொத்து சேர்த்தார் என்று அரசாங்கமே பெயர்ப்பட்டியல் வெளியிட்டிருக்கிறது. இந்த இருவரும் சிறீதரனுக்கு எதிராக தாமே செய்த முறைப்பாட்டை காரணம் காட்டி விலத்த வேண்டும் என்று அழுகிறார்கள்.
சிறீதரன் அரசியலமைப்பு சபைக்கு செல்வதற்கு ஒரு வீதம் கூட பங்களிக்காக சாணக்கியனும் சாமர சம்பத்தும் சிறீதரன் தமது கருத்துக்களை கேட்க வேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுவில் சிறீதரனின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத சுமந்திரன் சாணக்கியன் கூட்டணி, சிறீதரனை எப்படியாவது அரசியலில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று 1)சாராய அனுமதிப்பத்திரம் என்ற கட்டுக்கதை 2) இலஞ்ச ஊழல் முறைப்பாடு 3)இப்போது அரசியலமைப்பு சபையில் இருந்து அகற்றுவது என்று பல முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் சிறீதரனை வீழ்த்த முடியவில்லை அவர்களால். அவர்கள் சிறீதரனை வீழ்த்த எடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் சிறீதரனை மேலும் மேலும் வளர்த்துச்செல்கிறதே தவிர வீழ்த்தவில்லை.
தர்மம் வெல்லும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை