வெண்டைக்காய் வறுவல் செய்வது எப்படி!


தேவையான பொருட்கள்
 

            

வெண்டைக்காய் - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

கடலைமாவு - 2 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1 மூடி

தனியாதூள் - 1/4 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

            

செய்முறை விளக்கம் 

            

முதலில் வெண்டைக்காயை கழுவி விட்டு மேல் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு நான்காகக் கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயை போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து ஊற வைக்க வேண்டும்.

கடலை மாவை வெண்டைக்காய் கலவையில் தூவி பிசறி வைக்க வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.