பண்ணாகம் விசவத்தனைப் பதியுறையும் சண்முகப்பெருமான் ஆலயத்திற்கு எழுந்தருளிய வரலாறு!
ஏறத்தாழ நூற்றியம்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் காரைநகர் பிரதான வீதி வழியாக புதிதாக வார்க்கப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட சண்முகப்பெருமான் விசவத்தனை வீதிக்கு முன்பாக வரும் போது வாகனம் நின்று விட்டதாகவும் கடும் பிரயத்தன முயற்சிகள் எடுத்தும் வாகனம் இயங்க மறுத்தது.
அன்றைய காலத்தில் வாழ்ந்த கிராமத்து பெரியவர்கள் இந்த செய்தியை அறிந்து அந்த இடத்திற்கு வந்து விலையை மதித்து இந்த சண்முகப்பெருமானை எங்கள் ஆலயத்திற்கு தருமாறு கேட்டபோது தங்கள் ஆலயத்திற்கு என்று வாகனத்தில் கொண்டு வந்தவர்களும் அதற்கு சம்மதித்து அதனை விசவத்தனை முருகன் ஆலயத்தில் சேர்ப்பித்தனர் என்பது செவி வழிக்கதையாகும்.
வயலும் வயல் சார்ந்த பிரதேசமான பண்ணாகம் விசவத்தனையே தனக்குரியது என்று விரும்பி வந்து எழுந்தருளியிருக்கிறார் எம்பெருமான்.
அழகும் விசாலமும் கனதியும் புன்சிரிப்பும் நிறைந்தவரான எம்பெருமான் சண்முகப்பெருமான் (ஆறுமுகன்) விசவத்தனைப்பதியில் வீற்றிருந்து தன்னை நாடிவருவோர்க்கு வேண்டிய வரம் யாவும் அருளுகிறார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை