சூரன் போர் ஆகிய சைவ சடங்கில் இருக்கின்ற நாடகப் பண்புகள் எவை?


நாடகத்திற்கான கதை: தீங்குகள் செய்யும் வில்லனான சூரனை, கதாநாயகரான முருகன் போர் செய்து அழித்தல் ( தமிழ் சினிமாவின் கதையின் ஒற்றைவரி கதையும்கூட) 


நாடகத்திற்கான அரங்கு: ஆலயத்தின் வெளிவீதி முழுவதும் அரங்காக பயன்படுத்தப்படும்.


நடிகர்கள்: முருகனாக ஐயரும், சூரனாக பக்தர்களில் சிலரும் (சூரனை ஆட்டுபவர்கள்) இடம்பெறுவர்.


பார்வையாளர்: பக்தர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக அல்லாமல், அரங்கின் வெற்றி குறிகாட்டியான பங்குபற்றலுடன்கூடிய பார்வையாளராக செயற்படுவர். 


நடிப்பு: ஒன்றைப் போலச்செய்தலே நடிப்பாகும். முருகனைப் போலவும், சூரனைப் போலவும் மாந்தர்கள் போலச்செய்வர்.


ஒப்பனை: முருகனை, சூரன் ஆகியோர் அவர்தம் பாத்திரத்தன்மைக்கேற்ப ஒப்பனை செய்யப்பட்டிருப்பர். உதாரணத்திற்கு வில்லனான சூரன் முறுக்கிய மீசையுடன் அகங்காரமாகப் பக்தர்களின் தோளில் அமர்ந்து வலம்வருவர். 


இசை: பக்தர்கள் பக்தி மேலீட்டால் பாடும் பதிகம் மற்றும் மணியோசை உள்ளிட்ட இன்னபிற.


மேடைப்பொருட்கள்: அம்பு, வில் உள்ளிட்ட பல பொருட்கள்


இம்முறை சைவ கோயில்களில் இடம்பெற்ற சூரன் போர் சடங்கில் தமிழ் சமூகம் தவறவிட்ட ஆற்றுகை கலையொன்றை அழகாகப் பார்க்க முடிந்தது. மரபார்ந்த/ஐதீகமயப்பட்ட சடங்கொன்றில் காணப்படும் நாடகத்தன்மைகளை இலகுவாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. தமிழர் உலகின் தொல்குடி என்பதற்கு இதனைவிட என்ன சான்று வேண்டும்..! 


இதேபோல சூரன் போருக்கென வரலாற்றுப் பார்வை, மானுடவியல் பார்வை, சமூகவியல் பார்வை எனத் தனித்தனியே உண்டு. நாம் எல்லாவற்றையும் பக்தி என்கிற மூன்றெழுத்திற்குள் க(ம)ட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.


ஜீரா தம்பி

படம்: வீரகேசரி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.