கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..!

 


இலங்கையில் நடந்த சோகம்.புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர்.


குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அந்தத் திரவத்தை அருந்திய பின்னர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.