இது மோசடி இல்லையா இதற்கு ஜேவிபி அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதா?
வெடிவைத்தகல்லு திரிவைத்த குளம் காணி உரிமையாளர்கள் காணியினை சரீரப்பங்களிப்பில் துப்பரவு செய்த போது வனஇலாகா திணைக்களத்தினர் இவர்களை கைது செய்து சிறையிலடைத்து மூன்று வருடங்களாக வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தக்காலப்பகுதியில் போகஸ்வெவவில் வசிக்கும்(கொக்கச்சான் குளம் தமிழர்களின் பூர்வீக நிலம் சிங்கள குடியேற்றத்தின் பின் சட்டவிரோதமாக போகஸ்வெவவாக பெயர் மாற்றப்பட்டது) சிங்கள குடியேற்ற வாசிகள் இந்தக்காணியினை டோசர்கள் மூலம் வெளியாக்கி சட்டவிரோதமாக அந்தர்வெவ எனும் பெயரில் சிங்களக்கமக்கார அமைப்பினை உருவாக்கி வயல் செய்து வருகிறார்கள். இந்த விடயங்களை வெளியில் கொண்டுவந்தமைக்காக போகஸ்வெவவில் வசிக்கும் மகிந்தவின் மொட்டுக்கட்சியைச்சேர்ந்த விமல்தர்மதாச என்பவரால் எமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு உடந்தையாக அங்கு பணிபுரிந்த கிராம சேவகர் ஒருவரும் தற்போதைய பிரதேச செயலாளராக தரமுயர்த்தப்பட்ட சிங்கள பெண்மணியும் கையொப்பமிட்டு அந்தர்வெவ எனும் சட்டவிரோத கமக்கார அமைப்பின் பயனாளிகள் பட்டியலை உறுதிப்படுத்தி நெடுங்கேணி கமநல சேவைநிலையத்தால் உரமானியம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த திரிவைச்ச குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதேச செயலாளரிடம் மக்கள் பிரதிநிதிகள் வினாவிய போது அது மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வருகின்ற காணி தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நழுவி வந்தார். தான் கையெழுத்து வைத்து உரமானியத்திற்கு சிபார்சு செய்த கடிதத்தை மறைத்துவிட்டார்.(குறித்த கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
கடந்த 13ம் திகதி தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குறித்த காணி யாரின் அதிகாரத்தின் கீழ் வருகின்றது என்று கேள்வியெழுப்பியிருந்தேன் நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தினால் அதற்கான பதிலாக/தகவலாக குறித்த காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வருவதாக அறிய முடிகின்றது என்று எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது.(குறித்த கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது)
இரண்டு கடிதங்களுடனும் நேற்றையதினம் அதாவது 29/10/2025 நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு அனுமதியில்லாத போதும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகரன் அவர்களுடன் சென்று குறித்த விடயம் தொடர்பாக கேள்வி யெழுப்பினேன். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்வரும் காணியாக இருந்தால் எவ்வாறு தாங்கள் கையெழுத்திட்டீர்கள் என கேள்வி எழுப்பினேன். தடுமாறிய பிரதேச செயலாளர் பதில் உடனடியாக வழங்க முடியாமல் நீங்கள் எவ்வாறு உள்ளே வந்தீர்கள் என பல சந்தர்ப்பங்களில் வினாவினார் பிரதேச சபை உறுப்பினர் என்று நினைத்தே என்னை கதைக்க அனுமதித்தாகவும் இல்லையென்றால் அனுமதி வழங்கியிருக்கமாட்டேன் என எதேச்சாதிகாரமாக பதிலளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகரனும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு.உபாலி சமரசிங்கவிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை ஜேவிபியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.ஜெகதீஸ்வரன், திரு.திலகநாதன் ஆகியோரும் வாய்திறக்காமல் கம்மெண்டிருந்தார்கள்.
கேள்விக்கு பதில் வழங்காத பிரதேச செயலாளர் என்னை நோக்கி நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கேட்பது சர்வாதிகாரத்தின் உச்சமே பிரதேச செயலாளரின் சட்டவிரோத கையொப்பத்திற்கு ஜேவிபி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
-வி.தவபாலன்-



.jpeg
)





கருத்துகள் இல்லை