பெட்ரோல் ஏற்றிச்சென்ற லொறி வெடித்து 39 பேர் பலி

 மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெற்றோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளாகியதில் 39 பேர் பலியானார்கள்.

நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் டேங்கர் லொறியில் இருந்த


பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லொறி வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரொய்ட்டர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.