வல்வெட்டித்துறை தீருவில் நினைவு சதுக்கத்தில்.!📸

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தீயினில் எரியாத தீபங்களின் 38ஆவது நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வணக்கநிகழ்வு இன்று 05.10.2025 தீருவில் நினைவிடத்தில் இடம்பெற்றது. 

மூத்த தளபதிகள் புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும். 

தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா அரசு முயன்றபோது அதற்கு இந்தியப் படைகள் ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் 05.10.1987 அன்று புலேந்திரன் குமரப்பா அப்துல்லா நளன் மிரேஸ் பழனி கரன் ரகு அன்பழகன் தவக்குமார் ஆனந்தகுமார் ரெஜினோல்ட் ஆகிய அந்தப் பன்னிரு வேங்கைகளும் 'சயனைட்' உட்கொண்டு உயிரிழந்த 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இந்தியா திலீபன் அண்ணைவைக் காப்பாற்றத் தவறியதால் அவரது உயிர் பிரிந்து 9 ஆவது நாளில் இவர்கள் 12 பேரினதும் மணத்திற்கு இந்திய உடந்தையாக இருந்தது. இந்தியா தனது நலன்களுக்காக தமிழ் மக்களை பலியிடத் தயங்காது என்பதற்கான இரண்டாவது சம்பவமாக இது அமைந்து. இச்சம்பவங்கள் இடம்பெற்று 38 ஆண்டுகளின் பின்னரும் இந்தியா 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனைப் பற்றிப் பேசுவது மிகவும் ஏமாற்றகரமான விடயமாகும். 
இந்த தனது வலாற்றுத் தவறை திருத்த வேண்டும். வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும். 
ஒற்றையாட்சியை நீக்கி சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவர இந்தியா இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென இம்மாவீரர்களது நினைவு நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.