பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணி முன் வந்தால் வழக்கு தொடர தயார்!
பொலிஸார் அனுமதி பெறாது
நுழைந்த விவகாரம் ..பாதிக்கப்பட்ட சட்டத்தரணி முன் வந்தால் வழக்கு தொடர தயார்.. சட்டத்தரணி மணிவண்ணன்.
பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் நீதிமன்ற அனுமதி பெறாமல் உள்நுழைந்த பொலிசார் தொடர்பில் பாதிக்கப்பட பெண் சட்டத்தரணி முன்வருவாராயின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு சட்டத்தரணிகள் தயாராக இருப்பதாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதி மன்றத்துக்கு முன்னால் பெண் சட்டத்தரணி வீட்டில் அனுமதி இன்றி போலீசார் உள் நுழைந்தமை தொடர்பில் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒருவருடைய வீட்டில் சோதனை நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டுமானால் நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று குறித்த வீட்டுக்குச் சென்று அதனை காட்டி தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
ஆனால் ஒரு சட்டத்தரணி வீட்டுக்குச் சென்று அவர் அங்கு இல்லாத நிலையில் அவரின் வீட்டுக்குள் நுழைந்து தேடுதலை மேற்கொண்டமை சட்டத்துக்கு முரணான விடயம் அதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அங்கு சென்ற பொலிசார் குறித்த சட்டத்தரணியுடன் தொலைபேசியில் கதைத்த போது அவர் தான் வெளி மாவட்டத்தில் நிற்பதாக தெரிவித்த நிலையிலும் அதனைப் பொருட்படுத்தாத பொலிசார் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர்.
வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் பல இடங்களை ஆராய்ந்தமை பொலிசாரின் மிலேச்சத்தனமான அராஜகமான செயற்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
குறித்த சட்டத்தரணி யாழ் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் தனது பணியை மேற்கொள்பவர் அவரிடம் வாக்குமூலம் பெறுவதாயின் அவர் வருகை தந்ததும் பெற முடியும் ஆனால் பொலிசார் வேண்டுமென்றே இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
அவர் ஒரு சட்டத்தரணி அவருக்கு சட்டத்தில் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படாது சாதாரண பொது மகன் வீட்டை பொலிஸார் சோதனை செய்வதற்கு என்ன நடைமுறையோ அதே நடைமுறைதான்.
ஆகவே பொலிசாரின் கட்டுக்கடங்காத செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட சட்டத்தரணி முன்வருவாராயின் போலீசாரக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்..

.jpeg
)





கருத்துகள் இல்லை