யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கம் பழைய பூங்கா வளாகத்தில் அமையப்பெறவுள்ளது!
வடக்கிற்கான யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கம் பழைய பூங்கா வளாகத்தில் அமையப்பெறவுள்ளது.
இதற்கான அடிக்கல் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டப்படவுள்ளது.
எம்மவர்களிடம் வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்தில் அதீத திறமைகளிருக்கும் போதும் உள்ளகப் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வாய்ப்புகள் வடக்கில் இன்மையால் உள்ளக அரங்குகளில் இடம்பெறும் போட்டிகளில் முதலிடங்களைப் பெறுவதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
இதற்கான தீர்வினை அமையப்பெறும் உள்ளக விளையாட்டரங்கு மூலம் எட்டமுடியுமென்பதில் நம்பிக்கையுண்டு.
இங்கு பாடசாலை மாணவர்கள், இளைஞர் களகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் பங்குகொண்டு பயன்பெற முடியும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை