வவுனியா மக்களுக்கான அவசர எச்சரிக்கை -தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர்…!
வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும் பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை